நாட்டு மக்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் இன்ப அதிர்ச்சி!

Report Print Vethu Vethu in சமூகம்
1042Shares

தமிழ், சிங்கள புத்தாண்டினை கொண்டாட இலங்கை மக்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் காணப்படும் அதிகளவான விலையேற்றம் காரணமாக, அடிமட்ட மக்கள் அவல நிலையை எட்டியுள்ளனர்.

நாட்டிலுள்ள சகலரும் புத்தாண்டினை சிறப்பாக கொண்டாடும் வகையில், அரசாங்கம் விசேட சலுகைகளை வழங்கவுள்ளது.

அதற்கமைய நாட்டு மக்களின் நலன் கருதி லக் சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக உணவுப் பொதி விநியோகிக்கப்படவுள்ளன.

மொத்தமாக 1515 ரூபா பெறுமதியுள்ள உணவுப் பொதி, 975 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரது ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடெங்கிலும் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக குறைந்த விலையில் உணவுப் பொதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

எதிர்வரும் 20ம் திகதி வரையிலான காலப்பகுதியில் அத்தகைய 10 இலட்சம் பொதிகளை விநியோகிப்பது அரசாங்கத்தின் இலக்கு என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

Comments