புதுவருட கொண்டாட்டத்தினால் நடந்த விபரீதம் - சடலமாக மீட்கப்பட்ட தாய்

Report Print Vethu Vethu in சமூகம்
723Shares

பொலன்னறுவை பகுதியில் வீடொன்றில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெலிந்த, மஹாவெலிதென்ன கிராமத்தை சேர்ந்த 42 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளர்.

அவரது மூன்று பிள்ளைகளும் புதுவருட நிகழ்வில் கலந்துக் கொள்வதற்காக சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் வீட்டில் தனியாக இருந்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்திருக்க கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தற்போதுவரையில் வெலிகந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன

Comments