தொழில் கிடைத்தால் மாத்திரமே புதுவருட கொண்டாட்டம்! அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்
22Shares

புதுவருடமல்ல எந்த பண்டிகை வந்தாலும் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடுவோம். தொழில் கிடைத்தால் மட்டுமே எமக்கு புதுவருடம் மற்றும் பண்டிகையெல்லாம் என அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

காரைதீவில் அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேற்று 40ஆவது நாளாகவும் தமது போராட்டத்தினை தொடர்ந்திருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வேலை கிடைத்தால் மாத்திரமே எங்களுக்கு பண்டிகை. அதுவரை நாங்கள் காத்திருப்போம்.

அம்பாறை மாவட்டத்திற்கு இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் விஜயம் செய்யவிருப்பதாக அறிகின்றோம்.

இதன்போது இந்த முச்சந்தி பூராக கறுப்புநிற கொடிகளும் பதாதைகளும் தொங்கவிடவுள்ளோம் என தெரிவித்தனர்.

இதேவேளை காரைதீவிலுள்ள பட்டதாரிகள் போராட்ட கூடாரத்தின் வெள்ளைக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

மேலும் பாராளுமன்ற தெரிவுக்குழு அன்று கேட்டுக்கொண்டதற்கிணங்க அம்பாறை மாவட்ட பட்டதாரிகளது பெயர் மற்றும் விபரங்கள் அடங்கிய தனித்தனி விண்ணப்பப் படிவங்கள் நிரப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments