யாழில் மின்சாரம் தாக்கி இணைபிரியாமல் உயிரிழந்த தம்பதிகள்

Report Print Vino in சமூகம்
2084Shares

யாழ். சுன்னாகம் பகுதியில் மின்சார தாக்குதலுக்கு இலக்காகி கணவன், மனைவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவமானது நேற்றைய தினம் ஐயனார் கோவில் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இன்று காலை தங்களுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாகவே இவர்கள் உயிரிழந்தமை தொடர்பில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆலயத்தில் இடம்பெற்று வரும் உற்சவத்திற்காக வீட்டினை அலங்கரித்து கொண்டிருந்த வேளையிலேயே, குறித்த அனர்தமானது இடம்பெற்றுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொலிஸசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments