நல்லதண்ணி நகரில் பகல் நேரங்களிலும் வீதி விளக்குகள் ஒளிர்கின்றன

Report Print Thirumal Thirumal in சமூகம்
44Shares

நல்லதண்ணி நகரில் பகல் நேரங்களில் வீதி விளக்குகள் ஒளிர்வதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த பகுதியில் சில வீதிகளில் இன்று பிற்பகல் 01 மணியளவில் மின் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்துள்ளதாக நல்லதண்ணி பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித அக்கறையும் எடுப்பதில்லையென கவலை வெளியிட்டுள்ளனர். இதேவேளை, மின்சாரம் வீணாகுவது தொடர்பாக மக்கள் தமது அதிருப்திகளை வெளியிட்டுள்ளனர்.

Comments