திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய தேர்த்திருவிழா

Report Print Victor in சமூகம்
99Shares

திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த மாதம் 30ஆம் திகதி ஆரம்பித்த நிலையில் தற்பொழுது தேர்த்திருவிழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று காலை இடம்பெற்றதுடன், இரதத்தின் முன் சிறுவர்களின் பல கலை நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வுகளில் எதிர்க்கட்சித் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கலந்து கொண்டிருந்ததுடன், பக்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை நாளை தீர்த்தோற்சவம் நாளை நடைப்பெறவுள்ளதுடன், நாளை மாலை திருவிழா நிகழ்வுகள் நிறைவடையும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments