வவுனியாவில் பாடசாலை அதிபர் மீது தாக்குதல்

Report Print Theesan in சமூகம்
1026Shares

வவுனியாவில் பாடசாலை அதிபர் மீது இன்று நண்பகல் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் அதிபர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா தோணிக்கல் பகுதியில் வசித்துவரும் பாடசாலை அதிபர் நேற்று தனது வீட்டின் பின்பக்க வேலிக்கு தூண்போடும் பணியினை மேற்கொண்டுள்ளார்.

இன்று அதிபரின் வீட்டிற்கு வர்ணம் பூசும் வேலைகளை பணியாளர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். அதிபர் நிறப்பூச்சு வாங்குவதற்காக நகர் கடைக்குச் சென்றுள்ளார்.

இதன்போது பிற்பகல் 1 மணியளவில் பின்வீட்டு காணியில் வசித்துவரும் உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் என 4, 5 பேரடங்கிய குழுவினர் அதிபரின் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த அதிபரின் உறவுப் பெண்மணி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே அதிபர் வந்ததும் பின்வீட்டு உரிமையாளர், அதிபருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அதிபர் மீது தாக்குதலையும் மேற்கொண்டுள்ளார்.

இதையடுத்து அதிபர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினையும் அதிபர் மேற்கொண்டுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த பாடசாலை அதிபர் ஏ. முரளிதரன் (47வயது) வவுனியா பொது வைத்தியசாலையில் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து தாக்குதல் நடத்திய பின்வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments