கிளிநொச்சியில் அதிரடிப்படையினரால் கஞ்சா மீட்பு : ஒருவர் கைது

Report Print Suman Suman in சமூகம்
34Shares

கிளிநொச்சி பரந்தன், சிவபுரம் உண்டியல் சந்திக்கு அருகில் வைத்து கஞ்சாவுடன் சென்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஞ்சா போதைப்பொருளுடன் குறித்த பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த வேளை விசேட அதிரடிப்படையினர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

இதன் போது சந்தேகநபர் தப்பிச்செல்ல முற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், விரைவாக செயற்பட்ட விசேட அதிரடிப்படையினர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

அத்துடன், சந்தேகநபரிடம் இருந்து சுமார் 4 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, குறித்த பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதாக பொது மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வெடி வைத்தே சந்தேகநபரை கைது செய்திருக்க கூடும் என பொது மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில், விசேட அதிரடிப்டையினர் அதனை மறுத்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் மீட்கப்பட்ட கஞ்சாவினையும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் அதிரடிப்படையினர் கையளித்துள்ளனர்.

Comments