வர்த்தமானி அறிவித்தல் முழு முசலி பிரதேசத்திற்கும் எழுதப்பட்ட அடிமை சாசனம்!

Report Print Ashik in சமூகம்
27Shares

வர்த்தகமானி அறிவித்தலை இரத்து செய்ய கோரி மரிச்சுக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி மற்றும் முசலி பிரதேசத்தில் உள்ள கிராமங்களினால் சுழற்சி முறையில் மேற்க்கொண்டு வரும் வனயீர்ப்பு போராட்டம் இன்றும் தொடருகின்றது.

12ஆவது நாளாக தொடரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் சிலாவத்துறை ஆட்டோ சங்கம் மரிச்சுகட்டிக்கு சென்று மக்களை சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

இந்த வர்த்தமானி அறிவித்தல் முழு முசலி பிரதேசத்திற்கும் எழுதப்பட்ட அடிமை சாசனம் என்று இதன்போது அதன் தலைவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

கவனயீர்ப்பு போராட்டத்திற்கு நாங்கள் முழு ஆதரவுகளை வழங்கி உள்ளோம். அத்துடன் முசலி பிரதேசத்தில் உள்ள அனைத்து ஆட்டோ சங்க உறுப்பினர்களையும், அழைத்து எதிர்வரும் காலங்களில் பாரிய ஆர்ப்பாடங்களையும் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Comments