மீதொட்டமுல்லயில் உண்மையில் நடந்தது என்ன? மீண்டும் ஆபத்து ஏற்படும் - புவியியலாளர்கள் எச்சரிக்கை

Report Print Vethu Vethu in சமூகம்
337Shares

மீதொட்டமுல்லவில் ஏற்பட்ட அனர்த்தம் குப்பை மேடு சரிவு என கூறப்பட்ட போதிலும், அது பாரிய மண் சரிவை போன்றதொரு நிலைமை என புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கழிவு மலைகள் உடைந்து விழுவதென்பது இயற்பியல் அடிப்படையில் இடம்பெறும் என்ற போதிலும், இது மண் சரிவின் உள் பகுதியில் ஏற்படும் உயிர்வேதியியல் நடவடிக்கை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒரே நேரத்தில் பாரிய சத்தத்தை ஏற்பட்ட பாரிய வெடிப்புடன் அந்த குப்பை மேடு கீழே சரிந்து விழுந்துள்ள சம்பவம் ஒன்றே மீதொட்டமுல்லயில் இடம்பெற்றுள்ளது. மீதொட்டமுல்ல குப்பை மேடு வெடிப்பல் அவ்வாறான சம்பவத்திற்கு முகம் கொடுத்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு குப்பை மேடுகளில் மண் சரிவு (Rubbish dump landslide) ஏற்படுவதென்பது உலகின் பல்வேறு நாடுகளில் இடம் சம்பவங்களாகும். இறுதியாக இவ்வாறான பாரிய சம்பவம் ஒன்று கடந்த மார்ச் 12ஆம் திகதி எத்தியோப்பியாவின் தலைநரகமான அடிஸ் அபாபா நகரத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த அனர்த்தத்தில் 113 பேர் உயிரிழந்துள்ளனர்.

எப்படியிருப்பினும் இந்த குப்பை மேட்டுக்கு அருகில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் இவ்வாறான வெடிப்பு அல்லது மண்சரிவு ஏற்பட கூடிய வாய்ப்புகள் உள்ளதாக புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இது தொடர்பில் இந்த நாட்டின் பலர் அறியாமையுடன் இருப்பதே ஆபத்தை அதிகரிப்பதற்கான காரணம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Comments