ரயில் பயணம் தொடர்பில் யாழ் மக்களிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்

Report Print Vethu Vethu in சமூகம்
598Shares

சமகாலத்தில் ரயிலில் பயணிப்பதை யாழ்ப்பாண மக்கள் விரும்புவதில்லை என யாழ் ரயில் நிலையத்தின் பயணச்சீட்டு கருமபீட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நிலவும் கடும் உஷ்ணமான காலநிலை காரணமாக ரயிலில் பயணிப்பதை யாழ்ப்பாண மக்கள் பெரிதும் தவிர்த்து வருதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் யாழ்ப்பாணம் - கொழும்பு வரையில் செல்லும் ஏசி வசதி கொண்ட கடுகதி ரயிலில் பயணிக்க ஆர்வம் கொண்டுள்ளனர்.

இதற்கமைய கடுகதி ரயில் பயணத்திற்கான ஆசனங்கள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னரே முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழமையாக கடுகதி ரயில் பயணத்திற்கான ஆசனங்கள் 3 அல்லது 4 நாட்களுக்கு முன்னரே முற்பதிவுகள் செய்யப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments