நல்லாட்சி அரசின் சீர்கெட்ட நிர்வாகத்தினால் மனித உயிர்களை பலியெடுத்த குப்பைமேடு

Report Print Reeron Reeron in சமூகம்
80Shares

நல்லாட்சி என சொல்லப்படுகின்ற ஆட்சியாளர்களின் சீர்கெட்ட நிர்வாகம் காரணமாக 30 மனித உயிர்களை பலியெடுக்கும் நிலைமைக்கு மீதொட்டமுல்ல குப்மைமேடு விவகாரம் உருவெடுத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.

ஏறாவூர் 5ஆம் குறிச்சி சக்ஸஸ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று (17) இரவு நடைபெற்ற சித்திரை வருடப் பிறப்பு விழாவின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த குப்பை மேட்டு பிரச்சினை தொடர்பாக மீதோட்டமுல்ல மக்கள் வீதிக்கு இறங்கி பல தடவை ஆர்ப்பாட்டங்கள், உரிய அதிகாரிகளுக்கு மகஜர், அரசுக்கு அழுத்தம் போன்ற பல்வேறுபட்ட முறைகளை கையாண்ட போதும் அந்த மக்களுக்கு தீர்வினை கடந்த அரசாங்கம் தொடக்கம் நல்லாட்சி என்ற அரசும் எவ்விதமான தீர்வினையும் பெற்றுக்கொடுக்காத நிலையில் தற்போது 23 தொடக்கம் 30 வரையான அப்பாவி மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்ட துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மக்கள், பல்வேறு மகிழ்ச்சியான கனவுகளுடன் குடும்பமும் சுற்றமும் என ஒன்று கூடி தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருந்த ஒரு சில மணித்தியாலங்களில் அப்பாவி மக்களின் அவலக்குரல் ஊரெங்கும் ஒலித்த கொடூர சம்பவம் இதற்கெல்லாம் காரணம் சீர்கெட்ட அரச அதிகாரிகளின் அசமந்தபோக்கு.

இலங்கையில் எந்த விடயம் மக்களுக்கு எதிராக நடந்தாலும் மக்களின் உயிர் பலி நடைபெற்ற பிறகு தான் அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பல இடங்களில் பல பிரச்சினைகளுக்கு வாக்குறுதி அளித்துவரும் நிலையில் மீதொட்டமுல்ல மக்களின் குப்பைமேட்டுப் பிரச்சினைக்கும் அவ்வாறான உத்தேச நாடகத்தை தான் உறுதிபட தெரிவித்துள்ளார்கள் என வியாளேந்திரன் தெரிவித்தார்.


you may like this..

Comments