ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஒளிப்பதிவாளர் உதேனி ஜயவர்தன காலமானார்.
கடுமையாள சுகயீனம் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார்.
உதேனி ஜயவர்தன, 1998 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஊடகப் பிரிவில் ஒளிப்பதிவாளராக இணைந்தார்.
இவர் நாட்டில் உள்ள மூத்த ஒளிப்பதிவாளர்களில் பிரசித்தி பெற்ற ஒருவராவார்.
இதேவேளை உதேனி ஜயவர்தனவின் உடல், நாளை காலை 10 மணிமுதல் 5.30 மணிவரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும் என்றும், அவரின் இறுதிக் கிரியைகள் பொரல்ல கனத்தையில் மாலை 6 மணிக்கு இடம்பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.