லசந்த கொலை : முன்னாள் இராணுவ அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு

Report Print Ramya in சமூகம்
35Shares

சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிலரிடம் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்யவுள்ளனர்.

டொனால்ட் பெரோ, மேஜர் ஜெனரல் மனோ பெரேரா மற்றும் மேஜர் ஜெனரல் குமார் பெரேரா ஆகியோரிடம் இன்றைய தினம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று காலை 10 மணியளவில் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments