அக்கரைப்பற்று - பொத்துவில் வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தானது நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே இந்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞரும், 45 வயதுடையவருமே உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.