எருவில் கிராமத்திற்கு நன்கொடை வழங்கும் நிகழ்வு

Report Print Nesan Nesan in சமூகம்
81Shares

எருவில் கிராமத்தில் உள்ள மூன்று கழகங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை எருவில் நூலகத்தில் நடைபெற்றது.

கனடாவில் வாழும் ஒருவர் நன்கொடை உதவிகளை வழங்கியுள்ளதுடன், குறித்த நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன், எருவில் கண்ணகி வித்தியாலய அதிபர் சா.பரமானந்தம் கிராமத்தில் உள்ள ஆலயங்களின் தலைவர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெண்கள் அமைப்பினர் மூன்று கழகங்களையும் உடைய உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.

இதேவேளை, பொருட்களை கையளிக்கும் நிகழ்வானது மூன்று கழகங்களையும் உடைய தலைவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த உதவியினை மட்டக்களப்பை சேர்ந்த தற்போது கனடா நாட்டில் வசித்து வரும் முருகேசு விஸ்வநாதனுடன் ஊடகவியலாளர் ஆர்.தில்லைநாயகம் தொடர்பு கொண்டு எருவில் கிராமத்தின் நிலை தொடர்பாக எடுத்து கூறியுள்ளார்.

இதனையடுத்து, எருவில் இளைஞர் கழகம், கண்ணகி விளையாட்டுக்கழகம், உதயநிலா கலைக்கழகம் ஆகிய மூன்று கழகங்களுக்கும் உதவ வேண்டும் என்ற நோக்கில் 40 அடி நீளமான தகரத்தினாலான கொட்கை ஒன்றினை மக்கள் நலன் சார்ந்து வழங்கியதோடு, கை, கால் செயற்படாமல் இருக்கும் ஒருவருக்கு துவிச்சக்கர பொருட்கள் அடங்கிய கடை ஒன்றினை வைப்பதற்கான நிதியுதவியினையும் வழங்கி வைத்துள்ளார்.

மேலும், இக்கிராமத்திற்கு வாழ்வாதாரத்தில் பின்தங்கி காணப்படும் மக்களுக்கு எதிர்காலத்தில் உதவிகள் பல செய்யவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Comments