சம்பந்தன் ஐயா நினைத்தால் எமக்கு முடிவை எடுத்து தர முடியும்

Report Print Kari in சமூகம்
42Shares

சம்பந்தன் ஐயா நினைத்தால் பாராளுமன்றத்தில் வெளிநடப்பு செய்து எமது கோரிக்கைகளுக்கு ஒரு முடிவை எடுத்து தரமுடியும் என வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டு வரும் போராட்டம் 57ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.

இது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில்,

சம்பந்தன் ஐயா நினைத்தால் பாராளுமன்றத்தில் வெளிநடப்பு செய்து எமது கோரிக்கைகளுக்கு ஒரு முடிவை எடுத்து தரமுடியும். அவரும் மெளனமாக இருக்கின்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அரசியல்வாதிகள் எங்களை வந்து பார்த்தார்கள். தற்போது அவர்களும் எங்களை மறந்து விட்டார்கள்.

எவ்வளவோ பணத்தை வெளிநாடு செல்வதற்கு இந்த அரசாங்கம் செலவிடுகின்றது. அதை வைத்து எமக்கு தொழில் வாய்ப்பு வழங்க முடியாதா என அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

Comments