எம்பம் செய்யாமல் புதைக்கப்பட்ட மீதொட்டமுல்ல மக்களின் சடலங்கள்!

Report Print Ramya in சமூகம்
111Shares

புத்தாண்டு தினத்தன்று மீதொட்டமுல்ல பகுதியில் உள்ள குப்பைமேடு சரிந்தமையினால் 30 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் உயிரிழந்த பலரின் சடலங்கள் நேற்றைய தினம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதன் போது உயிரிழந்தவர்களின் சடலங்களை வைப்பதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சவப்பெட்டிகள் மிகவும் தரம் குறைவானதென குறித்த பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அந்த சவப்பெட்டிகள் உடைந்து விடாமல் இருப்பதற்கு துணியினால் கட்டி சடலங்கை கொண்டு செல்வதனை காண முடிந்ததென மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த சவப்பெட்டிகள் 1500 ரூபாய்க்கும் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்பட்டிருக்க கூடும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த சடலங்களை எம்பம் செய்யாமல் பொலித்தீன் பையில் சுற்றி வைத்திருந்ததாகவும், பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Comments