வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 54 ஆவது நாளாக இன்றும் (18) தொடர்கிறது.
குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் அரசாங்கத்தை பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், இந்த நிலையில் சாதகமான பதில் கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.