அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு நாளை

Report Print Reeron Reeron in சமூகம்
56Shares

தியாகத்தீபம் அன்னை பூபதியின் 29ஆம் வருட நினைவு நிகழ்வுகள் நாளை நடத்தப்படவுள்ளது.

மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபத்தில் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறுவதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை இணைப்பாளர் கணேசன் பிரபாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் ஊடக கற்கைகள் நிறுவனத்தில் இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது குறித்த நிகழ்வுக்கான முக்கியத்துவத்தினை கணேசன் பிரபாகரன் தெளிவுபடுத்தினர்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் முதன்முதலாக அன்னை பூபதியின் 29ஆம் ஆண்டு நிகழ்வை அனுஸ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறான நினைவு தினங்களை எமது கட்சி முன்னெடுத்துச் செல்லும். தமிழ் மக்களின் போராட்டத்தை அகிம்சை வழியான போராட்டமாக மாற்றியவர் அன்னையவர்கள்.

கடந்த 10 வருடங்களாக அன்னை பூபதியின் நினைவு தினத்தினை யாரும் அனுஸ்டிக்கவில்லை.

மட்டக்களப்பு மற்றும் ஏனைய மாவட்டத்திலுள்ள அனைத்து போராளிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதுடன் நடைபெறவுள்ள நினைவு தின நிகழ்வுக்கு அனைவரையும் ஜனநாயகப் போராளிகள் கட்சி அழைக்கின்றனர் என தெரிவித்தார்.

Comments