கொழும்பில் மாநகர சபை மூலம் சேகரிக்கப்படும் அனைத்து குப்பைகளும் பிலியந்தலையின், கரதியான குப்பை சேகரிக்கும் பகுதியில் இடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பு அன்று மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னரே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில், குப்பைகளை தற்காலிகமாக, பிலியந்தலையின், கரதியானவில் இடுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அன்றைய அனர்த்தத்தின் பின்னர், கொழும்பு மாநகர சபையினால், கெஸ்பேவ நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இந்த அனுமதி கிடைத்துள்ளது.
அந்தவகையில், எதிர்வரும் 28 ஆம் வரையில் சேகரிக்கப்படும் 350 மெட்ரிக் தொன் குப்பைகளை இடுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.