மூன்றாவது முறையாக திருமணம் செய்ய முயற்சித்த குடும்பஸ்தருக்கு விளக்கமறியல்

Report Print Yathu in சமூகம்
261Shares

கிளிநொச்சி பகுதியில் மூன்றாவது முறையாக சிறுமி ஒருவரை திருமணம் செய்யமுற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா நேற்று உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் ஏற்கனவே இரு திருமணங்களை செய்து கொண்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிறுமி ஒருவரைத் திருமணம் செய்யமுற்பட்டுள்ளர்.

இது தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரை கைது செய்த பொலிஸார், நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments