மதுபான போத்தல்களுடன் கைதாகிய இருவருக்கு தண்டப்பணம்

Report Print Yathu in சமூகம்
40Shares

கிளிநொச்சி பகுதியில் அரச சீல் மதுபானத்தினை விற்பனை செய்ய உடமையில் வைத்திருந்த மற்றும் 5 போத்தல் கசிப்பு வைத்திருந்தவர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்குகள் நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா இந்த உத்தரவினை பிறப்பித்திருந்தார்.

அந்த வகையில், கிளிநொச்சி பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி அரசசீல் மதுபானத்தினை விற்பனை செய்ய உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு நீதவானால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், பதினையாயிரம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிளிநொச்சி பகுதியில் 5 போத்தல் கசிப்புடன் இரண்டாவது தடவையாக கைது செய்யப்பட்டவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், 10 நாட்கள் சமூக சேவையில் ஈடுபடுமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தலா ஒரு போத்தல் கசிப்பினை உடமையில் வைத்திருந்த இரண்டு பேருக்கு தலா ஐயாயிரம் ரூபாவும், இரண்டு போத்தல் கசிப்பினை வைத்திருந்த ஒருவருக்கு இருபதாயிரம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments