பிரித்தானியாவில் புகலிடம் கோரியுள்ள ஈழ அகதிகளுக்கு நெருக்கடி

Report Print Murali Murali in சமூகம்
3418Shares

பிரித்தானியாவில் புகலிடம் கோரியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த புகலிட கோரிக்கையாளர்களை விரைவாக வெளியேற்றும் சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

பிரித்தானிய ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில்,

25 தொடக்கம் 28 நாட்களுக்குள் புகலிட கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும். புகலிடம் கோருபவர்களில் தகுதியற்றவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.

இதன் மூலம் புகலிட கோரிக்கையாளர்கள் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்படும் காலம் குறைவடையும். தற்போது 100 நாட்களுக்கும் மேல் புகலிட கோரிக்கையாளர்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்படுகின்றனர்.

மேலும், புகலிட கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் நீதிபதிக்கு, விண்ணப்பதாரியை அனுமதிப்பதா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும் மேலதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானிய அரசின் இந்த புதிய சட்டம் ஈழ அகதிகளுக்கு பாரிய பாதிப்பாக அமையும் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments