ஜனாதிபதியின் சம்பூர் விஜயம் தொடர்பான விஷேட கூட்டம்

Report Print Gokulan Gokulan in சமூகம்
40Shares

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சம்பூருக்கான விஜயம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

குறித்த கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று(17) இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்,கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ, சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ். தண்டாயுதபானி, வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவர்த்தி கலப்பத்தி, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட திணைக்கள அதிகாரிகள் படையினர் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் விஜயத்தின் போது பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜனாதிபதியின் விஜயத்தின் போது சம்பூர் வைத்தியசாலை திறக்கப்படவுள்ளதுடன், லங்கா பட்டண பாலமும் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.

இது தவிர கடைத்தொகுதிகள் மற்றும் கலாச்சார மண்டபமொன்றும் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

அத்துடன் ஜனாதிபதியின் சம்பூர் விஜயம் தொடர்பான மற்றுமொரு கூட்டம் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் இடம்பெறவுள்ளதோடு, ஜனாதிபதியின் வருகை தொடர்பான பல முக்கிய விடயங்களும் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments