மறிச்சிக்கட்டி பிரதேச மக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Report Print Ashik in சமூகம்
39Shares

வனபரிபாலன திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட 2012/2017ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல்களை இரத்து செய்யக்கோரி முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டை கரடிக்குளி, பாலைக்குளி, மறிச்சிக்கட்டி பிரதேச மக்கள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று மாலை பதிவு செய்துள்ளனர்.

எவ்வித முன் அறிவித்தலும் இன்றி தங்களுக்கு தெரியாமல் 2012ஆம் ஆண்டு வனபரிபாலன திணைக்களத்துக்கு தமது காணிகளை சுவீகரித்துள்ளதாகவும், 2017ஆம் ஆண்டு கால அவகாசம் வழங்காமல் தமது பூர்வீக காணிகளை வனபரிபாலன திணைக்களத்துக்கு சொந்தமாக்கி ஜனாதிபதியினால் செய்யப்பட்ட வர்த்தமானி பிரகடனத்தை இரத்து செய்யக்கோரி ஊர் மக்கள் சார்பாக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் சட்டத்தரணிகளான றுஸ்தி ஹபீப், மில்ஹான் லத்தீப், மற்றும் அலிகான் சரீப், பர்ஸான் ஹமீட் தௌபீக் மௌலவி இணைப்பாளர் முஹிடீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments