நீர்கொழும்பு சிறைக்குள் போதைப் பொருள் கடத்தும் முயற்சி முறியடிப்பு

Report Print Aasim in சமூகம்
38Shares

நீர்கொழும்பு சிறைக்குள் போதைப் பொருள் கடத்துவதற்கு மேற்கொண்ட முயற்சியொன்று இன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரைப் பார்வையிடுவதற்கு வந்திருந்த ஒருவரே சிறைச்சாலைக்குள் திருட்டுத் தனமாக போதைப் பொருளை அனுப்பும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

கைதிக்கு கொடுப்பதற்காக எடுத்து வந்த சாப்பாட்டுப் பொருட்களுடன் ஐஸ்கிறீம் கப் ஒன்றின் அடியில் ரகசிய மறைவிடம் அமைத்து அதனுள் போதைப் பொருள் பைக்கற்றுகளை மறைத்து வைத்து, மேலாக பருப்புக் கறி நிரப்பி வைத்துள்ளார்.

எனினும் சிறைச்சாலை புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட பரிசோதனையின்போது ஹெரோயின் மற்றும் கஞ்சா அடங்கிய ஐந்து பைக்கற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து போதைப் பொருளை எடுத்து வந்த நபரைக் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைப்பதற்கு சிறைச்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Comments