மீதொட்டமுல்ல அனர்த்தம்! இழப்பீட்டை ஏற்க பாதிக்கப்பட்ட மக்கள் தயக்கம்

Report Print Aasim in சமூகம்
64Shares

மீதொட்டமுல்ல குப்பைமலை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான காப்புறுதி இழப்பீட்டை ஏற்க அங்குள்ள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

மீதொட்டமுல்ல குப்பைமலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் மற்றும் சொத்து இழப்புகளுக்கு 25 லட்சம் வரையான இழப்பீடு வழங்க நிதியமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தேசிய காப்புறுதி பொறுப்புச் சபை ஊடாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டுவதாக குப்பைமலைக்கு எதிரான பொதுமக்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்து பேசி அவர்களின் இணக்கப்பாட்டுடன் இழப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், திடீர் பேரிடர் சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் சுற்றுநிருபங்களைப் புறம் தள்ளி இழப்பீடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் இருப்பதைக் கவனத்திற் கொண்டு குப்பைமலை அனர்த்தத்தையும் அவ்வாறான கணிப்பீட்டுக்கு உட்படுத்தி இழப்பீடு வழங்குமாறும் குப்பைமலைக்கு எதிரான பொதுமக்களின் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி நுவன் போபகே வலியுறுத்தியுள்ளார்.

Comments