அம்பாறை மாவட்டத்தில் இளநீரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இளநீர் ஒன்றின் விலை 100 ரூபாவாக விற்கப்படுவதாகவும் மக்கள் கூறியுள்ளனர்.
வெப்பத்தின் அதிகரிப்பின் காரணமாகவே வர்த்தகர்கள் தமது நீர் சார் உணவுப்பொருட்களை உயர்விலையில் விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நீர்ப்பூசனிக்காய்க்கும் விலை அதிகரிப்பு நிலவுகின்றது. கிலோ ஒன்று 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகின்றது.