மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் கருத்து வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் மீட்பு பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கு முன்னர் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அதன் போது வழங்கிய உதவிகளை போன்று மீதொட்டமுல்ல பிரதேச மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் கல்வி கற்ற சமூகத்தினர் அதிகளவில் இருக்கின்ற போதிலும் குப்பைகளை நவீன முறையில் மீள்சுழற்சி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.