அரசியல்வாதிகளே எம்மை வைத்து அரசியல் நடத்தாதீர்கள்!

Report Print V.T.Sahadevarajah in சமூகம்
38Shares

சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் எமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என்றும் அரசியல்வாதிகளே எம்மைவைத்து அரசியல் நடத்தவேண்டாம் எனவும் அம்பாறை மாவட்ட வேலையில்லாப்பட்டதாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

காரைதீவு விபுலானந்த சதுக்கமருகே முகாமிட்டு 51ஆவது நாளாக இன்றும் தொடர் சத்தியாக்கிரப் பேராட்டத்தில் அம்பாறை மாவட்ட வேலையில்லாப்பட்டதாரிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

இதன்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளனர். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள வேலையில்லாப்பட்டதாரிகள்,

வடக்கு, கிழக்கு என்றும் இலங்கையில் பெயர்பொறித்திருகின்றது. யுத்தம் , கல்வி அது மட்டும் இல்லை இப்போது தொடர்போராட்டங்களிலும் வடக்கு கிழக்கு முக்கியத்துவம் பெறுகின்றது.

அரச தொழில் கிடைக்கும்வரை எமது போராட்டம் தொடரும். எத்தனை நாட்கள் சென்றாலும் எமது பேராட்டத்தை நாம் கைவிடப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Comments