மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வெசாக்தின நிகழ்வுகள்

Report Print Ashik in சமூகம்

நாடளாவிய ரீதியில் பல்வேறு பாகங்களிலும் வெசாக் தினக் கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் மன்னாரில் பொலிஸார், இராணுவம் மற்றும் கடற்படையினரினால் வெசாக் தின நிகழ்வுகள் சிறப்பாக நேற்று(10) அனுஷ்டிக்கப்பட்டது.

கடற்படை மற்றும் இராணுவத்தினரால் புத்த பெருமானின் உருவச்சிலைகள் மின்விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்டு புத்தபெருமானின் பிறப்பினை சித்தரிக்கும் காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

சனிவிலேச் கடற்படை முகாமிற்கு முன்பாகவும், வங்காலை தோமஸ்புரி கடற்கரை முகாமிற்கு முன்னாலும் கடற்படையினரின் ஏற்பாட்டில் வெசாக் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

மேலும் தள்ளாடி இராணுவ முகாமிற்கு முன்னால் இராணுவத்தினரால் வெசாக் தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டன.

இதேவேளை மன்னார் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் மன்னார் பிரதான பாலத்தடியில் வெசாக் தினத்தை முன்னிட்டு சிறப்பு அன்னதானமும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments