தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

பாடசாலைகளில் சமய கல்வி முறையின் ஊடாக இலங்கையின் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க உருவாக்கம் தொடர்பாக மத தலைவர்கள் மற்றும் சமய பாட ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்று தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஒழுங்கமைப்பில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது சமய பாடங்கள் ஊடாக நல்லிணக்கத்தை உண்டாக்குவது தொடர்பான கருத்து பரிமாற்றம் மற்றும் உரைகள் நிகழ்த்தப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

இதில் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜன், மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments