கொழும்பு வாழ் மக்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்!

Report Print Ramya in சமூகம்

கொழும்பில் 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அவசரத் திருத்தப் பணிகள் காரணமாக நாளைய தினம் நீர் விநியோகம் தடைப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை இரவு 10 மணிமுதல் 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 02 மற்றும் கொழும்பு 03 ஆகிய பகுதிகளிலேயே நீர் விநியோகம் தடைப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு 08, கொழும்பு 10 மற்றும் ஹெவ்லொக் நகரப் பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொது மக்களை முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை கேட்டுக் கொண்டுள்ளது.

Comments