முஸ்லிம்கள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும் எதிர் தாக்குதல் நடத்தியதில்லை

Report Print Nesan Nesan in சமூகம்

நாட்டில் நடைபெரும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதலை அமெரிக்க தூதரகம் கண்டித்திருப்பதை முஸ்லிம் உலமா கட்சிகளும் இஸ்லாமிய இயக்கங்களும் பகிரங்கமாக வரவேற்க வேண்டும் என்று உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இன்று கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மைக்கால‌ங்க‌ளில் சிறுபான்மையின‌ர் மீது ந‌ட‌த்த‌ப்ப‌டும் தாக்குத‌ல்க‌ளுக்கு அர‌சாங்க‌மே பொறுப்புக்கூற‌ வேண்டுமென‌வும் இல‌ங்கையிலுள்ள‌ அமெரிக்க‌ தூதுவ‌ர் அதுல் கெஷாப் த‌ன‌து டுவிட்ட‌ரில் தெரிவித்துள்ள‌மை நொந்து போயிருக்கும் முஸ்லிம்க‌ளுக்கு ஓர‌ள‌வு ஆறுத‌ல் த‌ரும் விட‌ய‌மாகும்.

அமெரிக்க‌ தூதுவ‌ரின் இக்க‌ண்ட‌ன‌ம் மிக‌ச்சிற‌ந்த‌ எடுத்துக்காட்டாக‌ இருக்கும் அதேவேளை முஸ்லிம் நாடுக‌ள் வெளிப்ப‌டையாக‌ த‌ம‌து க‌ண்ட‌ன‌ங்க‌ளை தெரிவிக்காம‌ல் இருப்ப‌து க‌வ‌லை த‌ருவ‌தாக‌வும் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் தெரிவித்துள்ளார்.

இல‌ங்கை முஸ்லிம்க‌ள் இன்று வ‌ரை எந்த‌வொரு ப‌ய‌ங்க‌ர‌வாத‌ செய‌ல்க‌ளிலும் ஈடுப‌ட‌வில்லை. ஒரு பௌத்த‌ ப‌ன்ச‌லைக்கேனும் க‌ல் வீசிய‌தில்லை. முஸ்லிம்கள் மீது ப‌ல‌ தாக்குத‌ல்க‌ள் தொடுக்க‌ப்ப‌ட்ட‌ போதும் இன்று வ‌ரை எதிர் தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌தில்லை.

அந்த‌ள‌வுக்கு பொறுமையாக‌ இருக்கும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ அர‌ச‌ பின்புல‌த்துட‌ன் தாக்குத‌ல்க‌ள் மேற்கொள்ள‌ப்ப‌டுவ‌து க‌ண்டிக்க‌த்த‌க்க‌தாகும் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments