மட்டு. வேலையற்ற பட்டதாரிகளின் தலைவர் உட்பட நால்வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Report Print Kumar in சமூகம்

வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் மற்றும் தலைவர் உட்பட நால்வரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மாதம் கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின் போது நீதிமன்ற கட்டளை கிழித்தெறியப்பட்டது தொடர்பில் திருகோணமலை பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பிலான வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த நான்கு பேரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவினை திருகோணமலை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி பிறப்பித்தார்.

இந்த நிலையில் மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த் மற்றும் அகில இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் தென்னாந்த ஞானரத்ன தேரர் உட்பட நான்கு பேரே இவ்வாறு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments