ஹிக்கடுவ துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

Report Print Kamel Kamel in சமூகம்

ஹிக்கடுவ பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹிக்கடுவ பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு இளைஞர்கள் இருவரே இலக்காகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலில் காயமடைந்த இருவரும் கராபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments