ஈரானில் கொடூரமானமுறையில் ஈழத்து இளைஞர் படுகொலை

Report Print Murali Murali in சமூகம்

தொழில் நிமித்தம் ஈரான் சென்ற ஈழத்து இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞரின் சடலம் நீர்கொழும்பு, மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

முல்லைத்தீவு, அலம்பிள் பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த இளைஞரின் தந்தையிடம் வாக்கு மூலம் ஒன்று பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த இளைஞர் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், முக்கிய உடற்பாகங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


You may like this video

Comments