சுத்தமான கைகளுடன் செல்கின்றேன், அனைவருக்கும் நன்றி: ஊடக அமைச்சில் கயந்த

Report Print Shalini in சமூகம்

“நல்லாட்சியில் இரண்டரை வருடங்களாக ஊடக அமைச்சராக பணியாற்றி உள்ளேன். இந்த காலக்கட்டத்தில் எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி” என முன்னாள் ஊடக அமைச்சரும் தற்போதைய காணி அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

ஊடக அமைச்சில் இன்று இடம்பெற்ற சந்திப்பிலேயே இதை கூறினார். நேற்று இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தில் 9 அமைச்சுக்களின் பதவிகளில் மாற்றம் ஏற்பட்டிருந்தது.

இதில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடக அமைச்சராக இருந்த கயந்த கருணாதிலக, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

மங்கள சமரவீர நிதி மற்றும் ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கயந்த கருணாதிலக இறுதியாக ஊடக அமைச்சில் கூட்டம் ஒன்றை நடத்தி அங்கு அவருடன் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

நான் இந்த அமைச்சிலிருந்து செல்லும் போது சுத்தமான கைகளுடனேயே செல்கின்றேன். எந்த ஊழலும் செய்யவில்லை என குறிப்பிட்டார்.

மேலும், மக்களுக்கு உதவி செய்யக்கூடிய வகையில் காணி அமைச்சுப்பதவி கிடைத்திருப்பது மகிழ்ச்சியான விடயம் என்றும் குறிப்பிட்டார்.

Comments