உலகம் சுற்றும் முதலமைச்சர்! நாடாளுமன்றத்தில் வாதப் பிரதிவாதம்

Report Print Aasim in சமூகம்

மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த விவகாரம் காரணமாக நாடாளுமன்றத்தில் இன்று சூடான வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுள்ளன.

மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான கேள்வியொன்றுக்குப் பதிலளித்த மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா,

சீனா, தென் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு மட்டும் முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் , முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய அவுஸ்திரேலியா உள்ளிட்ட 18 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதனையடுத்து அமைச்சர் பைசர் முஸ்தபா கடுமையான தொனியில் பதிலளிக்க முற்பட்ட போது அவருக்கும் மரிக்கார் எம்.பி.க்கும் இடையில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தியதுடன், மாகாண சபைகளின் செயற்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு தெளிவான தகவல்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Comments