சிங்களம், ஆங்கில மொழியிலான கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சன்றிதழ் வழங்கும் நிகழ்வு

Report Print Reeron Reeron in சமூகம்

மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் ஏற்பாட்டில் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் கற்கை காலத்தை முடித்த மாணவர்களை கௌரவித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஏ.எஸ்.எம்.சாதீக் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு, கிரான் றெஜி கலாச்சார மண்டபத்தில் இன்று (23) இடம்பெற்றுள்ளது.

ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழி மூலமான கற்கை காலத்தை 9 மாதத்தில் பூர்த்தி செய்து வெளியேறிய மாணவர்களை கௌரவிக்கும் இரண்டாம் கட்ட நிகழ்வில் அழைப்பு அதிதிகள் அழைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிகழ்வில், சான்றிதல் வழங்கும் சிரேஸ்ட பிரஜைகளான மூத்த ஊடகவியலாளர்களும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது இராணுவ உயர் அதிகாரிகள் கௌரவிக்கப்பட்டதுடன், பயிற்சிகளை பூர்த்தி செய்த மாணவர்களினால் சிங்கள மொழியிலான கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

ஆங்கிலம் மற்றும் சிங்கள டிப்ளோமா பயிற்சி நெறிக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டு கற்கையை நிறைவு செய்துள்ளனர்.

இதன்போது பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான நினைவுப் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை நிகழ்வுக்கு வருகைதந்த அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.

இதேவேளை, நிகழ்வுக்கு 23ஆவது கட்டளை தலைமையக இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.டல்யூ.எஸ்.டீ.வி. பாணவல, கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) எஸ்.ரவிராஜ் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

Comments