மாத்தறையில் எட்டாயிரம் ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை நாசம்! விவசாயக் குடும்பங்கள் சோகம்

Report Print Aasim in சமூகம்

மாத்தறை மாவட்டத்தில் ஏற்பட்டிருந்த வெள்ளப் பெருக்கின் காரணமாக எட்டாயிரம் ஏக்கர் நெற்பயிர்ச் செய்கை அழிவடைந்துள்ளதாக மாவட்ட விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக மாத்தறை மாவட்டத்தின் 16 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பெரும் அனர்த்தமும், அழிவும் ஏற்பட்டிருந்தது.

இதன் ஒரு கட்டமாக மாவட்டத்தின் விவசாயப் பயிர்ச்செய்கைகளுக்கும் பெரும் அழிவு ஏற்பட்டிருந்தது.

தற்போதைக்கு கணக்கிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில் சுமார் எட்டாயிரம் ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை முற்றாக அழிவடைந்துள்ளது.

காலி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பெருந்தொகையான நிலப்பரப்பில் விவசாயப் பயிர்கள் மற்றும் நெற்பயிர்ச்செய்கை என்பன வெள்ளத்தினால் நாசமடைந்துள்ளன.

இதன் காரணமாக இந்த ஆண்டு பெரும் அரிசித் தட்டுப்பாடு ஒன்று ஏற்படலாம் என்ற அச்சம் தலைதூக்கியுள்ளது.

எனவே இதிலிருந்து விடுபட குறுகிய கால நெற்பயிர் வகைகள் மற்றும் அவற்றைப் பயிரிடுவதற்கான நிவாரண உதவிகளை கமநல சேவைகள் அமைச்சு மற்றும் திணைக்களம் என்பன இணைந்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.