சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - முள்ளியவளை வடக்குப் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுசார விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் இன்று (31) முள்ளியவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் உடைமையில் 25 லீட்டர் மதுசாரத்தினை வைத்திருந்ததாகவும், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.