பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும்: கணபதி கணகராஜ்

Report Print Gokulan Gokulan in சமூகம்

நாட்டில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான முறையில் நிவாரணம் கிடைக்க வேண்டும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜ் தெரிவித்துள்ளார்.

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஆத்ம சாந்தி வேண்டி சர்வமத பிரார்த்தனை இன்று கொழும்பு கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கடந்த ஒரு வார காலமாக இலங்கையிலே பெரும் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டிருந்தது. மழையும் வெள்ளமும் சேர்ந்து நூற்றுக்கணக்கான உயிர்களை காவு கொண்டிருந்தது.

இந்த தருணத்தில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மனோபலத்துடனும், தைரியத்துடனும் மீண்டும் தமது பணிகளை ஆரம்பிக்க வேண்டியும் இந்த சர்வமத பிரார்த்தனையிலே பிரார்த்தித்துக்கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.