தேவைகள் அறிந்து அமைச்சர் டெனீஸ்வரனால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

Report Print Ashik in சமூகம்

வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களது பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து மன்னார் மாவட்டத்தை சேர்ந்த தேவையுடைய பயனாளிகளுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று (31) மன்னார் மாவட்டத்தில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் நடைபெற்றது.

மன்னார் பெரிய பண்டிவிரிச்சான் கிராமத்தை சொந்த இடமாகவும் கடந்த யுத்தத்தில் தனது பெற்றோரை இழந்த நிலையில் மன்னார் டிலாசால் விடுதியில் தங்கியிருந்து உயர்தரக்கல்வியை கற்று வருகின்ற மாணவர் ஒருவருக்கும்,பாலையடி புதுக்குளம் பகுதியை சேர்ந்த இந்தியாவிற்கு அகதிகளாக சென்று தற்போது மீளக்குடியேறிய குடும்பஸ்தர் ஒருவருக்கும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் மன்னார் எமில் நகரைச் சேர்ந்த தனது தந்தையை இழந்த பாடசாலை செல்லும் மாணவர் ஒருவருக்கும் அவர்களது தேவைகளையும் ஆராய்ந்து வடமாகாண சபையின் பாதீட்டு நிதியில் இருந்து குறித்த மூவருக்கும் துவிச்சக்கரவண்டிகளை அமைச்சர் வழங்கிவைத்தார்.

இதன் போது முருங்கன் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை மார்க்கஸ் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.