தொழில் தருனர்களுக்கான பின்னூட்டல் பயிற்சி மட்டக்களப்பில்!

Report Print Navoj in சமூகம்

கனேடிய உலக பல்கலைக்கழக சேவை அமைப்பின் அனுசரனையுடன் மட்டக்களப்பில் செயற்படுகின்ற தொழில் தருனர்களுக்கான பின்னூட்டல் மற்றும் அவர்களுடைய வியாபாரத் திட்டங்களை சரியான முறையில் கொண்டு செல்வதற்கான உந்துதல் பயிற்சி நாவலடி புதிய சன்றைஸ் சுற்றுலா விடுதியில் இன்று நடைபெற்றது.

அமைப்பின் கிழக்கு மாகாண அணித்தலைவர் தி.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்தியாவில் இருந்து வருகை தந்த ஐஎல்எஸ் அமைப்பின் பிரபல வளவாளரான எஸ்.இளங்கோவன் கருத்துரை வழங்கினார்.

இக்கலந்துரையாடலில் இலங்கையில் கணனித்துறையுடன் செயற்படுகின்ற பிற்றிஸ் அமைப்பின் தொண்டரான றுமிஸ் இணைப்பின் ஊடாக அமைப்பின் தனியார் துறை முகாமையாளர் தி.திமோத்தி மற்றும் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட சிரேஸ்ட் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்களான எஸ்.ஜெயக்குமார், எஸ்.சரவணபவான் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கட்டட நிர்மான அமைப்பின் அங்கத்தவர்கள், கல்குடா பாசிக்குடா சுற்றுலா விடுதி உரிமையாளர் சங்க அங்கத்தவர்கள்;, கணனி மற்றும் காட்சிப்படுத்தல் தெழிநுட்ப அமைப்பின் அங்கத்தவர்கள், மட்டக்களப்பு பாடும்மீன் ஓட்டோ மொபைல் சங்கத்தின் தலைவர் மகேந்திரராசா மற்றும் சென் ஜோண்ஸ் தொழிற்கல்வி நிறுவனத்தின் அதிபர் முத்துகுமார், இணைப்பாளர் கங்காதரன்,; விவேகானந்தா தொழிநுட்பக் கல்லூரியின் பணிப்பாளர் பிரதிஸ்வரன் உட்பட சுமார் 30க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

வளவாளர் எஸ்.இளங்கோவினால் திறனுக்குத் தொழில் என்ற எண்ணக்கருவுடன் தொழிற் பயிற்சியை வழங்குகின்ற சென் ஜோன்ஸ் தொழிற்கல்வி நிறுவனம், விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பாசிக்குடாவில் அமைந்துள்ள கோட்டல், பாடசாலை போன்றவற்றில் பயிற்சி பெறுகின்ற மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் அவர்களைத் தயார் செய்தல் போன்ற பயிற்சிகளையும் சிறப்பாக வழங்கியிருந்தார்.