மண்சரிவினால் பாதிக்கபட்ட எஹெலியகொட பிரதேச மக்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இரத்தினபுரியில் எஹெலியகொட, ஹெமின்போர்ட் தோட்டம், தித்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 44 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குறித்த குடும்பங்களைச் சேர்ந்த 169 பேர் தற்காலிகமாக தித்தெனிய விகாரையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தற்காலிக இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை மலையக மக்கள் முன்னணியின் உப தலைவர் ரூபன் பெருமாள் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் மூலம் பெறப்பட்ட உலர் உணவு பொருட்கள் ரூபன் பெருமாள் மூலம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.