மட்டக்களப்பில் கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்துவதா?

Report Print Ajith Ajith in சமூகம்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் பயன்படுத்தப்படும் ஒருவகையான போதைமாத்திரைகள் மட்டக்களப்பில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் போர்க்களத்தில் விழிப்பாகவும், ஆக்ரோசமாகவும் இருப்பதற்காக Captagon அல்லது Fenethylline என்ற குறித்த மாத்திரைகளை பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இதுபோன்ற போதை மாத்திரைகளுடன் அண்மையில் சில இளைஞர்கள் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தரப்பிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது.

இதேவேளை, அண்மையில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, இங்கிருந்து இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெருந்தொகையான போதைமாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

இவை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்துவதற்காக இங்கிருந்து அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.