யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான வலுவூட்டல் நடன நிகழ்வுகள்!

Report Print Sumi in சமூகம்

யாழில் “மாற்றுத் திறனாளிகள் எதிர்நோக்கும் தடைகளை உடைத்தெறிவோம்” எனும் தொனிப்பொருளில் மாற்றுத் திறனாளிகளுக்கான வலுவூட்டல் நடன நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

விஸ்பிலிற்றி(visbility) எனும் கலை, கல்வி மற்றும் சமூகம் எனும் கோட்பாட்டினை உள்ளடக்கிய ஜேர்மன் மற்றும் இலங்கை மாற்றுத் திறனாளிகளை உள்ளடக்கிய நிறுவனம் இந்த ஏற்பாட்டினை செய்துள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.

மாற்றுத் திறனாளிகள் சமூகத்தினரால் ஒதுக்கப்படுகின்றார்கள். அவர்களின் இயல்பான திறமைகளை வெளிக்கொண்டு வரும் இவ்வகையான நடன நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இந்த நடன நிகழ்வில் மாற்றுத் திறனாளிகளும் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அல்லாதவர்களும் பங்குபற்றவுள்ளனர்.

இந்த நடன நிகழ்வு எதிர்வரும் 26ம் திகதி முதல் ஆகஸ்ட் 02ம் திகதி வரையில் யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் நடத்த தீர்மானித்துள்ளார்கள்.

மாற்றுத் திறனாளிகள் பாரபட்சமின்றி நடத்தப்படுவதில் இருந்தும் அவர்கள் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்வதற்கு ஏற்ற வகையிலும் இந்த பயிற்சிப் பட்டறை வித்தியாசமான அணுகுமுறையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

மாற்றுத் திறனாளிகளின் உரிமை பற்றி அறிவூட்டும் நிகழ்வாக இந்த நடன நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடன நிகழ்வு யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் கலப்பு நடனமாகவும், உரிமைப் பயிற்சி பட்டறையாகவும் ஒவ்வொரு நகரத்திலும் மூன்று பொது நடன நிகழ்வுகளையும் நடத்த ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

இந் நடன நிகழ்வுகளை ஜேர்மன் வெளிவிவகார அமைச்சும், பிரித்தானிய மனித நேய ஆய்வு மையமும் இணைந்து இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன.

இப் பத்திரிகையாளர் சந்திப்பில், ஹேர்டா மற்றும் ஹேலேனா உல்ரிகே மாரம்பியோ அங்கவீனமுற்றவர்களின் உரிமைகளுக்கான ஆலோசகர் மற்றும் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர், கமல் ஜனக ரத்னாயக்க இலங்கைக்கான ஒருங்கமைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.