பௌதீகவளப் பற்றாக்குறை காரணமாக அவதியுறும் முல்லைத்தீவு, புதியநகர் கிராம மக்கள்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு, புதியநகர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பௌதீகவளப் பற்றாக்குறை காரணமாகவும், வாழ்வாதாரத்திற்கான அடிப்படை வசதிகள் இன்மை காரணமாகவும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.

2012 ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தருவதாக பல வாக்குறுதிகள் அதிகாரிகளினால் வழங்கப்பட்டபோதும் இதுவரை எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மக்களது பயன்பாட்டில் உள்ள கனகராயன்குளம், கரிப்பட்ட முறிப்பு, பழைய கண்டிவீதி போன்ற 11 கிலோ மீற்றர் நீளமான வீதி திருத்தப்படாமல் காணப்படுவதால் தமது அவசர போக்குவரத்து தேவைகளை பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் குறிப்பிடுகையில், இவ்வாறான நெருக்கடி நிலைமைகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் காணப்படுவதாகவும், முடிந்தளவு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெகு விரைவில் தமது நிர்க்கதியான இந்த நிலையை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு தமக்கு தீர்வை பெற்றுத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.